கேரள மாநிலத்தில் நடைபெற்ற 26வது இந்திய அளவிலான காதுகேளாதோருக்கான பிரிவில் குண்டு எரிதல் போட்டியில் தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த வ.உ.சி. கல்லூரி மாணவி ஆர்.பிரித்தி சிவ பிச்சம்மாள் வெள்ளி பதக்கமும் ஹரியானாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 2 தங்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் குண்டு எரிதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இளபகவத் காண்பித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் இரவிச்சந்திரன் மாவட்ட விளையாட்டு அலுவலர்/இளைஞர் நல அலுவலர் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க பொதுசெயலாளர். மு.மெய்கண்டன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.